

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து மோதும் 3-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் உள்ள செட்டன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் நடந்த முதல் இரு ஆட்டங்களை எடுத்துக் கொண்டால் மழையின் பாதிப்பால் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டன. முந்தைய ஆட்டத்தில் நியூசிலாந்தை 134 ரன்னில் சுருட்டிய இந்திய அணி யும், வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடியது. 7 விக்கெட் டுக்கு 113 ரன்களுடன் தடுமாறிய போது மீண்டும் பலத்த மழை பெய்ததால் 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏறக்குறைய அதே போன்ற சூழலைத் தான் இன்றைய 3-வது ஆட்டத்திலும் இரு அணியினரும் சந்திக்க வேண்டி இருக்கும். அதாவது ஹாமில்டனிலும் சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்கிறது. இன்றைய ஆட்டமும் மழையால் வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சீதோஷ்ண நிலை காணப்பட்டால், ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே சாதகமாக இருக் கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சுக்கே முன்னுரிமை அளிக்கும்.
இந்திய அணியை பொறுத்தவரை முதல் இரு ஆட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப்சிங், குர்னூர் பிரார், அன்ஷூல் கம்போஜ் மிரட்டினர். ஆனால் பேட்டிங்கில் தொடக்க வீரர் ரோகித் சர்மா (0 மற்றும் 23 ரன்) எதிர் பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டியது முக்கியம்.
கேப்டன் சுப்மன் கில், லோகேஷ் ராகுல். கம்போஜ் உள்ளிட்டோர் இந்த போட்டியுடன் டெஸ்ட் தொடருக்கு தங்களை தயார்படுத்த வெலிங்டனுக்கு புறப்படுவதால், கடைசி இரு ஒரு நாள் ஆட்டங்களில் ஆடமாட்டார்கள். அத னால் இன்றைய ஆட்டத்திலேயே தொடரை வசப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா- சாவா? மோதல் போன்றது. இதில் தோற்றால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 ஒரு நாள் தொடர்களை வென்றிருந்த நியூசிலாந்தின் வீறுநடை முடிவுக்கு வரும். அந்த பெருமையை தக்க வைப்பதற்காக கடுமையாக போராடுவார்கள் என நம்பலாம். வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னெர் கடந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்த போது, 'பவுன்சர்' பந்து தலையில் தாக்கி யதால் காயமடைந்தார். அந்த பாதிப்பில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை. அதை கருத்தில் கொண்டு கிறிஸ்டி யன் கிளார்க் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு இந்த மைதானம் மிகவும் ராசியானது. இங்கு கடைசியாக 13 ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் கூட (12-ல் வெற்றில், ஒன்றில் முடிவில்லை) தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.