நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு


நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
x

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 6 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்குகிறது.

வதோதரா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இதில், டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ரிஷப் பண்ட் காயத்தினால் அணியில் இடம் பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷி, ஜடேஜா, குல்தீப் யாதவ் 3 பேர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரசித், சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணா 3 பேர் என 6 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்குகிறது.

1 More update

Next Story