கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமன் செய்துள்ளார். #SAvIND | #ViratKohli
கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
Published on

செஞ்சூரியன்,

கிரிக்கெட் அரங்கில் யாரும் நிகழ்த்த முடியாத பல அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்பவர் டான் பிராட்மன், ஆஸ்திரேலியாவைசேர்ந்த டான் பிராட்மேனின் சாதனைப்பட்டியலில், டெஸ்ட் போட்டியொன்றில், அணித் தலைவராகக் களமிறங்கி எட்டு முறை 150 ரன்களைக் குவித்த சாதனையையும் அடங்கும்.

டான் பிராட்மனின் இந்த சாதனையை, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமன் செய்துள்ளார். செஞ்சூரியனில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இந்திய அணியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 153 ரன்கள் குவித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக 150 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 8-வது முறையாகும். இதன்மூலம், பிராட்மனின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில், 7 முறை கேப்டனாக 150 ரன்களுக்கு மேல் எடுத்து மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உள்ளார். #SAvIND | #ViratKohli #DonBradman

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com