அதிக கேட்சுகளை கோட்டை விட்ட அணி - இலங்கை, தென் ஆப்பிரிக்காவை முந்திய இந்தியா

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பல முக்கிய கேட்சுகளை தவறவிட்டனர்.
அதிக கேட்சுகளை கோட்டை விட்ட அணி - இலங்கை, தென் ஆப்பிரிக்காவை முந்திய இந்தியா
Published on

சென்னை,

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி பீல்டிங்கில் மிகவும் தடுமாறியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பல முக்கிய கேட்சுகளை தவறவிட்டனர்.

ஐந்தாவது ஓவரில் பும்ரா வீசிய பந்தில், ரோஸ்டன் சேஸ் கொடுத்த கேட்சை அப்ஷேக் சர்மா பிடிக்கத் தவறினார். பின்னர், அர்ஸ்தீப் சிங் வீசிய கடைசிக்கு முந்தைய ஓவரில், ரோவ்மன் பவல் கொடுத்த மற்றொரு கேட்சையும் அபிஷேக் சர்மா தவறவிட்டார்.

இந்த தவறுகளால், இந்த தொடரில் இந்திய அணி தவறவிட்ட கேட்ச்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது இந்த தொடரில் அதிகபட்சமாகும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை - 11, தென்னாப்பிரிக்கா - 10 , அயர்லாந்து, ஜிம்பாப்வே -9 அணிகள் உள்ளன.

Also Read
பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி தொடர் - சவிதா விலகல்…சலிமா தலைமையில் களமிறங்கும் இந்தியா
அதிக கேட்சுகளை கோட்டை விட்ட அணி - இலங்கை, தென் ஆப்பிரிக்காவை முந்திய இந்தியா

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 196 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணி சர்பில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் எடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com