இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கான இலவச நுழைவுச் சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை:4 பேர் கைது

11 இலவச அனுமதிச் சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கான இலவச நுழைவுச் சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை:4 பேர் கைது
Published on: 

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டிக்கான இலவச அனுமதிச் சீட்டுகளை அதிக விலைக்கு விற்றதாகக் கூறி ஹைதராபாத் கிரிக்கெட் சங்க (HCA) உறுப்பினர் உட்பட 4 பேர், ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சதீஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா, அவரது மகன் ஆகர்ஷித் ஸ்ரீவஸ்தவா மற்றும் அவினாஷ் தரக், மோகித் சோமானி ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள். “விற்பனைக்கானது அல்ல” எனக் குறிப்பிடப்பட்ட 11 இலவச அனுமதிச் சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தச் சீட்டுகள் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் தலா ரூ.3,500 முதல் ரூ.6,000 வரை விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பணம், செல்போன்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கான அனுமதிச் சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குமாறு போலீசார் கிரிக்கெட் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com