

லண்டன்,
மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பரமவைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் இன்று யுத்தத்தில் இறங்குகின்றன. கிரிக்கெட் உலகின் பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் மோதுவதை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்திய அணியில் விளையாடும் வீரர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.