பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா

இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.
பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா
Published on: 

டோக்கியோ,

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் (20 ஓவர்) நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறிய இறு திப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுடன் கோதாவில் குதித்தது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மா அதிரடி கொடுத்தார். ஆனால் மறுபுறம் இந்தியா சில முக்கிய விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் பெரிய ஸ்கோர் செய்யாமல் வெளியேறியதால், ஒரு கட்டத்தில் இந்தியா சற்று அழுத்தத்துக்குள் சென்றது

அதன்பிறகு திலக் வர்மா மற்றும் சிவம் துபே இணைந்து இந்திய இன்னிங்ஸை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறிப்பாக கடைசி ஓவர்களில் இருவரும் பவுண்டரிகள், சிக்ஸர்கள் மூலம் ரன் வேகத்தை அதிகரித்தனர். இறுதியில் திலக் வர்மா 22 பந்துகளில் 51 ரன்கள் விளாசி இந்தியாவை 200 ரன்களைத் தாண்டச் செய்தார்.  இந்தியா 20 ஓவர்களில் 211/6 என்ற வலுவான ஸ்கோரை பதிவு செய்துள்ளது

பாகிஸ்தான் பந்துவீச்சில் அஹ்மத் டேனியல் 3 ஓவர்களில் 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எடுத்தார். சைம் அயூப் 4 ஓவர்களில் 47 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்தார்.

212 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் அணியில் ஹசன் நவாஸ் மற்றும் சைம் அயூப் இணைந்து அணியை மீட்டெடுக்க முயன்றனர். ஹசன் நவாஸ் அரைசதமடித்து 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் பாகிஸ்தானால் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.இதனால் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com