

லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20, 1 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
உலகப்புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. இதற்குமுன் இந்த லார்ட்ஸ் மைதானத்தில் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்றதே இல்லை. 1884ம் ஆண்டு முதல் ஆண்கள் டெஸ்ட் போட்டிகள் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் பெண்கள் டெஸ்ட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
அதன்படி, இங்கிலாந்து - இந்தியா மகளிர் டெஸ்ட் இம்மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட்டில் இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றிபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் அணி என்ற வரலாற்று சாதனை படைத்த இந்தியா படைத்துள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு ரசிகர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.