ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஆசிய விளையாட்டு
Published on

டோக்கியோ,

ஆசிய விளையாட்டு தொடரில் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய விளையாட்டு

20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின.

இந்தியா 195 ரன்கள்

ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கொரோகி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை ஷிபாலி வர்மா 49 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார் அசத்தினார்.

81 ரன்களுக்கு ஆல்-அவுட்

இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி வங்காளதேச அணி களமிறங்கியது.

ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

திலாரா அக்தர் அதிகபட்சமாக 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். கேப்டன் நிகார் சுல்தானா 9 ரன்களும், சுல்தானா கத்துன் ஆட்டமிழக்காமல் 12 ரன்களும் எடுத்தனர்.

மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் ரன் சேர்க்கத் தவறினர். இதனால் வங்காளதேச அணி 15.4 ஓவர்களில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இதன் மூலம் இந்திய அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com