பார்படாஸில் இருந்து புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி

பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டனர்.
பார்படாஸில் இருந்து புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி
Published on

பார்படாஸ்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் புயல் மற்றும் மழை காரணமாக அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் பார்படாஸில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று இந்தியா புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை 6 மணி அளவில் புது டெல்லியை வந்தடைவார்கள் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு புறப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய வீரர்கள் டி20 உலகக்கோப்பையில் வென்ற கோப்பையுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com