ஜிம்பாப்வேயில் சுற்றுலா மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
Image Courtesy: @BCCI
Image Courtesy: @BCCI
Published on

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வேயில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அந்நாட்டின் ஹராரே பகுதியில் இன்று சுற்றுலா (வைல்டு லைப் டூர்) மேற்கொண்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியினர் ஜிம்பாப்வேயில் சுற்றுலா மேற்கொண்ட புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் கவுன்சில் (பி.சி.சி.ஐ) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com