இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் சிறப்பாக வீசினர்: டி வில்லியர்ஸ்

தென் ஆப்ரிக்க ஆடுகளத்துக்கு ஏற்ப இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக’ தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார். #ABDevilliers #viratkohli
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் சிறப்பாக வீசினர்: டி வில்லியர்ஸ்
Published on

செஞ்சூரியன்,

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 24 ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்க ஆடுகளத்துக்கு ஏற்ப, இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தென் ஆப்ரிக்க வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், இந்திய அணி பவுலர்கள் உண்மையிலேயே என்னை கவர்ந்து விட்டனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டை பார்த்து நான் ஆச்சர்யம் அடைந்தேன். உண்மையில் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பேட்டிங்கில் எதிர்பார்த்தது போல கோலியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. விராட் கோலியை நான் தனிப்பட்ட முறையில் பாரட்டினேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com