குடும்பத்தினருடன் இணைந்து பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய வீரர்கள்

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்தனர்.
குடும்பத்தினருடன் இணைந்து பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய வீரர்கள்
Published on

புதுடெல்லி,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றுள்ளது. பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இதில் ஜஸ்பிரித் பும்ரா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து பிரதமருடன் புகைப்படம் எடுத்தார்.

அதேபோல் மற்றொரு இந்திய வீரரான ஜடேஜாவும் தனது மனைவியுடன் இணைந்து பிரதமருடன் புகைப்படம் எடுத்தார். அவர்களை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங்கும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து பிரதமருடன் இணைந்து புகைப்படம் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து இன்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் வலம் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com