இந்திய கிரிக்கெட் வீராங்கனை பூனம் ராவத் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பூனம் ராவத் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை பூனம் ராவத் ஓய்வு
Published on: 

மும்பை,,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க வீராங்கனையான பூனம் ராவத், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், 2021ஆம் ஆண்டு தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடினார். தனது 12 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் 264 ரன்களும், 73 ஒருநாள் போட்டிகளில் 2,299 ரன்களும், 35 டி20 போட்டிகளில் 719 ரன்களும் எடுத்துள்ளார். 2017ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் பூனம் ராவத் முக்கியப் பங்காற்றினார். அந்தத் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக 109 ரன்கள் எடுத்ததுடன், தீப்தி சர்மாவுடன் இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 320 ரன்கள் என்ற சாதனை தொடக்கக் கூட்டணியையும் அமைத்தார். இந்திய அணிக்காக விளையாடியது தனது வாழ்வின் மிகப்பெரிய பெருமை என்றும், கிரிக்கெட் தனக்கு அடையாளத்தையும் மறக்க முடியாத அனுபவங்களையும் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க விரும்புவதாகவும் பூனம் ராவத் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com