சிக்ஸரில் சாதனை படைத்த இந்தியா...வெஸ்ட் இண்டீஸ் அணியை முந்தி வரலாறு படைக்குமா?

சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடின.
சிக்ஸரில் சாதனை படைத்த இந்தியா...வெஸ்ட் இண்டீஸ் அணியை முந்தி வரலாறு படைக்குமா?
Published on

சென்னை,

டி20 உலக கோப்பை 2026 தொடரில் இந்திய அணி சிக்ஸர் மழை பொழிந்து புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த 2வது அணியாக இந்தியா திகழ்கிறது.

இந்த தொடரில் இதுவரை

வெஸ்ட் இண்டீஸ் - 66 சிக்ஸர்கள்

இந்தியா - 63 சிக்ஸர்கள் என்ற கணக்கில் உள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணி 66 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா வெறும் 3 சிக்ஸர்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. தொடரில் இன்னும் போட்டிகள் மீதமுள்ளதால், இந்த சாதனையை இந்தியா முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடின.

Also Read
பென்னட் போராட்டம் வீண்: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
சிக்ஸரில் சாதனை படைத்த இந்தியா...வெஸ்ட் இண்டீஸ் அணியை முந்தி வரலாறு படைக்குமா?

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய சூப்பர் 8 சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com