சர்வதேச கிரிக்கெட்: ஒரு பந்து கூட வீசாமல் அதிக ரன்... முஷ்பிகுர் ரஹீம் உலக சாதனை

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்கள் அடித்தார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

காலே,

இலங்கை-வங்காளதேசம் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 153.4 ஓவர்களில் 484 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்களும், கேப்டன் சாண்டோ 148 ரன்கள் அடித்து அசத்தினர். இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ, மிலன் ரத்னாயகே, தாரிந்து ரத்னாயகே தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

வங்காளதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹீம் இந்த ஆட்டத்தில் அடித்த ரன்களையும் (163 ரன்கள்) சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 15,513 ரன்கள் அடித்துள்ளார். அவரது கெரியரில் இதுவரை ஒரு பந்து கூட பவுலிங் செய்யவில்லை.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்து கூட வீசாமல் அதிக ரன் குவித்த வீரர் என்ற உலக சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 15,461 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள முஷ்பிகுர் ரஹீம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. முஷ்பிகுர் ரஹீம் - 15,513 ரன்கள்

2. ஆடம் கில்கிறிஸ்ட் - 15,461 ரன்கள்

3. குயிண்டன் டி காக் - 12,654 ரன்கள்

4. ஜோஸ் பட்லர் - 11,881 ரன்கள்

5. ஜானி பேர்ஸ்டோ - 11,581 ரன்கள் 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com