ஐ.பி.எல்.: பெங்களூரு அணிக்காக 1,000+ ரன்கள்.. படிக்கல் சாதனை

ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் படிக்கல் 40 ரன்கள் அடித்தார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

ஜெய்ப்பூர்,

18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்தது. பெங்களூரு தரப்பில் ஹேசல்வுட், குருனால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 175 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பில் சால்ட் 65 ரன்களும், விராட் கோலி 62 ரன்களும், படிக்கல் 40 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் தரப்பில் குமார் கார்த்திகேயா ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

இந்த ஆட்டத்தில் அடித்த 40 ரன்களையும் சேர்த்து படிக்கல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 1,000+ ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் விராட் கோலிக்கு பிறகு ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணிக்காக 1,000+ ரன்கள் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படிக்கல் படைத்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com