

துபாய்,
ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
முதல் போட்டியில் பெற்ற வெற்றி தொடர வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூர் அணியும், முதல் போட்டியில் தோற்றதால் இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பஞ்சாப் அணியும் களமிறங்கி உள்ளது.