ஐ.பி.எல்.: 20 லீக் ஆட்டங்கள் நிறைவு.. புள்ளி பட்டியல், ஆரஞ்சு, ஊதா தொப்பிகளின் நிலவரம் என்ன..?

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 20 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
சென்னை,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 20 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
இதன் முடிவில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை குறித்து இங்கு காணலாம்..!
டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா 6 புள்ளிகள் (3 வெற்றிகள்) பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி (+1.257) முதலிடத்திலும், குஜராத் (+1.031) 2-வது இடத்திலும், பெங்களூரு (+1.015) 3-வது இடத்திலும் உள்ளன.
இதனையடுத்து தலா 4 புள்ளிகள் பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் (+0.074) 4-வது இடத்திலும், கொல்கத்தா (+0.070) 5-வது இடத்திலும், லக்னோ (+0.048) 6-வது இடத்திலும், ராஜஸ்தான் (-0.185) 7-வது இடத்திலும் உள்ளன.
கடைசி 3 இடங்களில் முறையே முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் (-0.010) 8-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (-0.891) 9-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் (-1.629) 10-வது இடத்திலும் உள்ளன.
அதிக ரன் குவித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன் (201 ரன்கள்) தன்வசம் வைத்துள்ளார்.
இந்த பட்டியலில் உள்ள முதல் 5 வீரர்கள் விவரம்
1. நிக்கோலஸ் பூரன் - 201 ரன்கள்
2. சூர்யகுமார் யாதவ் - 199 ரன்கள்
3. சாய் சுதர்சன் - 191 ரன்கள்
4. மிட்செல் மார்ஷ் - 184 ரன்கள்
5. பட்லர் - 166 ரன்கள்
அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை சென்னை அணியின் நூர் அகமது (10 விக்கெட்டுகள்) தன்வசம் வைத்துள்ளார். மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 10 விக்கெட் வீழ்த்தி இருந்தாலும் சராசரி அடிப்படையில் 2-வது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் உள்ள முதல் 5 வீரர்கள் விவரம்:
1. நூர் அகமது - 10 விக்கெட்டுகள்
2. ஹர்திக் பாண்ட்யா - 10 விக்கெட்டுகள்
3. முகமது சிராஜ் - 9 விக்கெட்டுகள்
4. மிட்செல் ஸ்டார்க் - 9 விக்கெட்டுகள்
5. சாய் கிஷோர் - 8 விக்கெட்டுகள்.






