ஐபிஎல் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணி வீசியதால் பதற்றம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணியை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #IPL #IPL2018 #Chennai #Chepauk
ஐபிஎல் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணி வீசியதால் பதற்றம்
Published on

சென்னை,

சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். பதட்டமான நிலை ஏற்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. காவல்துறை மைதானத்திற்கு வெளிப்பகுதியிலும், உள்பகுதியிலும் பாதுகாப்பை அதிகரித்தனர். இதற்கிடையே மைதானத்திற்கு உள்ளேயும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மைதானத்திற்குள் ரசிகர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் விமர்சனத்திற்கு உள்ளானது, போராட்டத்திற்கு மாற்று வழிகள் தொடர்பான செய்திகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

பலத்த பாதுகாப்புக்கு இடையே போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மைதானத்திற்கு உள்ளே பார்வையாளர்கள் காலணிகளை வீசியது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பார்வையாளர்கள் பகுதியில் இருந்தவர்கள் மைதானத்தை நோக்கி காலணிகள், சட்டைகளை கழற்றி வீசிஉள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் யாரென்று விசாரித்து உள்ளனர். இதனையடுத்து ஆறு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மைதானத்திற்குள் பார்வையாளர்கள் காலணிகளை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கண்காணிப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com