

மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான பென்ஸ்டோக்ஸிற்கு நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது கை விரலில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பென்ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். பென்ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விலகியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.