

மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 21-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
இது வரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது.
அதே நேரத்தில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி சென்னை அணிக்கு எதிரான தங்கள் கடைசி போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
தோல்வியை சந்திக்காத வலுவான அணி என்ற முனைப்பை தொடர குஜராத் அணியும் வெற்றியை தொடர ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.