ஐபிஎல் 2023: மற்றொரு வீரர் காயம் காரணமாக விலகல்...மாற்று வீரரை அறிவித்த பஞ்சாப் கிங்ஸ்...!

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பஞ்சாப்,

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் ஆட்டங்கள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை ஐபிஎல் தொடரில் பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து பல்வேறு முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளனர். இதனால் பல அணிகளில் தகுந்த ஆடும் லெவனை தேர்வு செய்வதில் அணி நிர்வாகத்தினர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற இளம் வீரர் ராஜ் அங்கட் பவா காயம் காரணமாக எஞ்சிய ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், காயம் காரணமாக விலகி உள்ள அங்கட் பவாவுக்கு பதிலாக குர்னூர் சிங் ப்ரார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை ரூ. 20 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com