ஐபிஎல் 2024; ஏல பட்டியலில் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட 1,166 வீரர்கள் பங்கேற்பு!

இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஐபிஎல் 2024; ஏல பட்டியலில் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட 1,166 வீரர்கள் பங்கேற்பு!
Published on

மும்பை,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன.

இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள்  தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களான மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com