ஐ.பி.எல். 2024; குஜராத் அணியின் தொடக்க ஆட்டத்தை தவறவிடும் அதிரடி வீரர்

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் குஜராத் முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

சிட்னி,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த அணியான குஜராத், தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியுடன் வரும் 24-ம் தேதி மோத உள்ளது.

இந்நிலையில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன மேத்யூ வேட் முதலாவது போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ஷெபீல்ட் ஷீல்ட் தொடருக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டத்தை அவர் தவற விடுகிறார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com