ஐ.பி.எல்.2024; மும்பை அணியில் இருந்து ஜேசன் பெஹ்ரன்டோர்ப் விலகல் - மாற்று வீரர் அறிவிப்பு

ஜேசன் பெஹ்ரன்டோர்ப் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: @IPL
Image Courtesy: @IPL
Published on

மும்பை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்த சீசனுக்கான ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரன்டோர்ப் இந்த தொடரில் விலகி உள்ளதாக மும்பை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜேசன் பெஹ்ரன்டோர்ப் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த லூக் வூட்டை மும்பை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அவரை ரூ.50 லட்சத்துக்கு மும்பை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com