ஐபிஎல் 2024 ; 9 வீரர்களை விடுவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
image courtesy ; AFP
image courtesy ; AFP
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு காலக்கெடு கொடுத்திருந்தது. அது இன்றுடன் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 வீரர்களை விடுவித்துள்ளது.

வீரர்கள் விவரம் பின்வருமாறு;-

ஜேசன் ஹோல்டர், ஜோ ரூட், அப்துல் பாசித், குல்தீப் யாதவ், ஒபெட் மெக்காய், முருகன் அஷ்வின், கரியப்பா மற்றும் கே எம் ஆசிப் ஆகிய 9 வீரர்களை அணியிலிருந்து விடுவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com