ஐ.பி.எல்.2025: சிறந்த அணியை தேர்வு செய்த இந்திய முன்னாள் வீரர்.. யாருக்கெல்லாம் இடம்..?


ஐ.பி.எல்.2025: சிறந்த அணியை தேர்வு செய்த இந்திய முன்னாள் வீரர்.. யாருக்கெல்லாம் இடம்..?
x

image courtesy:PTI

தினத்தந்தி 6 Jun 2025 10:58 AM IST (Updated: 6 Jun 2025 10:59 AM IST)
t-max-icont-min-icon

18-வது ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது.

மும்பை,

ரசிகர்களை மகிழ்வித்து வந்த 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு பல முன்னாள் வீரர்கள் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் தான் தேர்வு செய்த சிறந்த அணியை அறிவித்துள்ளார். அந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

ஆனால் அந்த அணியில் சுப்மன் கில், பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோரை தேர்வு செய்யவில்லை.

இர்பான் பதான் தேர்வு சிறந்த ஐ.பி.எல். அணி:-

விராட் கோலி, சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஹென்ரிச் கிளாசென், நமன் திர், குருனால் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட், பிரசித் கிருஷ்ணா.

1 More update

Next Story