ஐ.பி.எல்.2025: ராஜஸ்தான் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடர் குறித்து தற்போதே பல்வேறு பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன.

அதோடு அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற இருப்பதினால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த ஐ.பி.எல். ஏலத்திற்கு முன்னதாக பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராகுல் டிராவிட் உடன் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com