ஐ.பி.எல். 2025: இந்த 4 அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் - சேவாக் கணிப்பு

ஐ.பி.எல். தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
Image Courtesy: @IPL
Image Courtesy: @IPL
Published on

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சேவாக் இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ள அணிகள் குறித்து தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிவித்துள்ளார்.

5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியானான கொல்கத்தா அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை என்று சேவாக் கணித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com