ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றம்: சிவம் மாவிக்கு பதில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் ஒப்பந்தம்

அம்ப்ரிஷ் போன்ற இளம் வீரரின் வருகை அணிக்கு புதிய உத்வேகத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றம்: சிவம் மாவிக்கு பதில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் ஒப்பந்தம்
Published on

புதுடெல்லி,

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணியில் விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி, காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ஆர்.எஸ். அம்ப்ரிஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் அம்ப்ரிஷ் முக்கிய இடம்பிடித்திருந்தார். அந்தத் தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இவரும் ஒருவர். மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Also Read
ரியான் பராக் அதிரடி.. ராஜஸ்தான் அணி 225 ரன்கள் குவிப்பு
ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றம்: சிவம் மாவிக்கு பதில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் ஒப்பந்தம்

வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், பேட்டிங்கில் இடது கை ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ். அம்ப்ரிஷ் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவம் மாவி போன்ற ஒரு அனுபவ வீரர் இல்லாதது அணிக்கு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அம்ப்ரிஷ் போன்ற இளம் வீரரின் வருகை அணிக்கு புதிய உத்வேகத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com