ரியான் பராக் அதிரடி.. ராஜஸ்தான் அணி 225 ரன்கள் குவிப்பு

ரியான் பராக் அபாரமாக விளையாடி 90 ரன்கள் எடுத்தார்.
ரியான் பராக் அதிரடி.. ராஜஸ்தான் அணி 225 ரன்கள் குவிப்பு
Published on

ஜெய்ப்பூர்,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 43வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் (6), சூர்யவன்ஷி (4)ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து கேப்டன் ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரேல் இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக ரியான் பராக், டெல்லியின் பந்துவீச்சை பவுண்டரிக்கு பறக்கவிட்டார். அவர் 50 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜுரேல் 42 ரன்களும், ஜடேஜா 20 ரன்களும் எடுத்தனர். இறுதியில் பெரேராவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் தரப்பில் மிட்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டி செய்ய உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com