’ஓடிஐ பார்ம்தான் காரணம்’… - மனம் திறந்த கோலி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடக்க போட்டியில் கோலி அவுட்டாகாமல் 69 ரன்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

’ஓடிஐ பார்ம்தான் காரணம்’… - மனம் திறந்த கோலி
Published on

பெங்களூரு,

ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் பெற்ற நல்ல பார்மே, தன்னை டி20 கிரிக்கெட்டிலும் அதே ரிதத்தில் விளையாட உதவியதாக தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடக்க போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கோலி 38 பந்துகளில் அவுட்டாகாமல் 69 ரன்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

Also Read
13 ஆண்டுகளாக தொடரும் தோல்வி… முதல் போட்டி சாபம் உடையுமா? - மும்பை ரசிகர்கள் எதிர்பார்ப்பு

’ஓடிஐ பார்ம்தான் காரணம்’… - மனம் திறந்த கோலி

போட்டிக்குப் பிறகு பேசிய அவர், “மீண்டும் மைதானத்துக்கு திரும்பியது மகிழ்ச்சி. கடந்த ஆண்டு இறுதிப் போட்டிதான் நான் கடைசியாக ஆடிய டி20 போட்டி. சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் நான் பேட்டிங் செய்த விதம், இப்போட்டியில் அதே ரிதம் மற்றும் மோமெண்டத்தை தொடர்ந்து வைத்திருக்க உதவியது. நான் வழக்கமாக விளையாடாத ஷாட்களை முயற்சிக்கவில்லை” என்றார்.

இந்த இன்னிங்ஸின் மூலம் கோலி ஐபிஎல் வரலாற்றில் 64-வது அரைசதத்தை பதிவு செய்ததுடன், சேசிங்கில் 4000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com