13 ஆண்டுகளாக தொடரும் தோல்வி… முதல் போட்டி சாபம் உடையுமா? - மும்பை ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்ள உள்ளது.
13 ஆண்டுகளாக தொடரும் தோல்வி… முதல் போட்டி சாபம் உடையுமா? - மும்பை ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Published on

மும்பை,

ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும்நிலையில், அந்த் மோசமான சாதனையை இந்த சீசனில் முறியடிக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, கடந்த 13 சீசன்களாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. மொத்தம் 18 சீசன்களில் 14 முறை தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

Also Read
ஐபிஎல் - சேசிங்கில் 4000 ரன்களைக் கடந்த முதல் வீரர்... வரலாறு படைத்த கோலி
13 ஆண்டுகளாக தொடரும் தோல்வி… முதல் போட்டி சாபம் உடையுமா? - மும்பை ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இரு அணிகளுக்கிடையேயான முந்தைய போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. 35 போட்டிகளில் 24 வெற்றி மும்பைக்கு கிடைத்துள்ளது. இதனால், இதில் மும்பை அணி முன்னிலை பெற்றிருந்தாலும், முதல் போட்டி சாபத்தை அவர்களால் முறியடிக்க முடியுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com