

மும்பை,
ஐபிஎல் தொடரின் தற்போதைய நிலவரப்படி, ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப் (Orange and Purple Cap) ரேஷில் முன்னிலையில் உள்ள வீரர்கள் குறித்த முழு விவரங்கள் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
இதில், ஆரஞ்சு கேப் பட்டியலில் ஐதராபாத் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதிக ரன்கள் எடுத்த முதல் ஐந்து வீரர்களில் ஐதராபாத் அணியைச் சேர்ந்த மூவர் உள்ளனர்.
ஹென்ரிச் கிளாசன் 494 ரன்களுடன் முதலிடத்தில் நீடித்து, ஆரஞ்சு கேப்பை தன்வசம் வைத்துள்ளார். அபிஷேக் சர்மா 475 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் டெல்லி அணியின் கே.எல். ராகுல் 468 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார். இஷான் கிஷன் 409 ரன்களுடன் நான்காம் இடத்திலும் ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி 404 ரன்கள் குவித்து ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
புவனேஷ்வர் குமார் தனது அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்தி 17 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அன்ஷுல் கம்போஜும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி சமநிலையில் இருந்தாலும், புவனேஷ்வர் குமார் சிறந்த எகானமி வைத்துள்ளதால் அவருக்கு 'பர்பிள் கேப்' கிடைத்துள்ளது. பிரின்ஸ் யாதவ் மற்றும் ககிசோ ரபாடா தலா 16 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
லீக் சுற்று முடிவதற்குள் இந்தப் பட்டியலில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.