மழையால் போட்டி ரத்தானால்... வெற்றியாளர் எப்படி தீர்மானிக்கப்படுவார்? - ஐபிஎல் புதிய விதிகள்

ஏப்ரல் மாதத்தில் பல போட்டிகள் மழையால் பாதிக்கப்படக்கூடும் என கூறப்படுகிறது.
மழையால் போட்டி ரத்தானால்... வெற்றியாளர் எப்படி தீர்மானிக்கப்படுவார்? - ஐபிஎல் புதிய விதிகள்
Published on

சென்னை,

இந்தாண்டு ஐபிஎல் சீசன் வருகிற 28 முதல் மே 31 வரை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையில், வட இந்தியாவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பல போட்டிகள் மழையால் பாதிக்கப்படக்கூடும் என கூறப்படுகிறது.

மழை காரணமாக போட்டி தடைப்பட்டால், கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படும். அந்த நேரத்திற்குள் முழு போட்டி நடத்த முடியாவிட்டால், குறைந்தது 5 ஓவர் போட்டி நடத்தி முடிவை தீர்மானிக்க முயற்சி செய்யப்படும். அதுவும் சாத்தியமில்லையெனில், சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படலாம்.

ஆனால், 5 ஓவர்களுக்குக் கூட போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்த ஆட்டம் ரத்து செய்யப்படும். அப்போது இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்.

Also Read
தினேஷ் கார்த்திக் - தீபிகா தம்பதிக்கு பெண் குழந்தை... குவியும் வாழ்த்து
மழையால் போட்டி ரத்தானால்... வெற்றியாளர் எப்படி தீர்மானிக்கப்படுவார்? - ஐபிஎல் புதிய விதிகள்

லீக் போட்டிகளுக்கு மாறாக, இறுதிப்போட்டிக்கு மட்டும் ‘ரிசர்வ் டே’ ஒதுக்கப்பட்டுள்ளது. மழையால் போட்டி நடத்த முடியாவிட்டால், அடுத்த நாள் நடைபெறும். அதிலும் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். உதாரணமாக, சென்னை அணி 2-வது இடத்திலும் மும்பை அணி 3-வது இடத்திலும் இருந்தால், சென்னை அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். ஆனால் இதுபோன்ற நிலைமை இதுவரை ஐபிஎல் வரலாற்றில் நிகழ்ந்ததில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com