

சென்னை,
ஐபிஎல் 2026 சீசன் தற்போது 50 போட்டிகளைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பேட்ஸ்மேன்களின் அதிரடியைச் சமாளிக்க முடியாமல் முன்னணி பந்துவீச்சாளர்கள் கூட திணறி வருகின்றனர். குறிப்பாக ஒரே போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான சாதனையை சில நட்சத்திர வீரர்கள் படைத்துள்ளனர்.
இந்த 'டாப் 5' மோசமான பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 3 பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
சேவியர் பார்ட்லெட் (69 ரன்கள்):
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் பார்ட்லெட் ஓவரில் கே.எல். ராகுல் ருத்ரதாண்டவம் ஆடினார். ராகுல் அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.
அர்ஷ்தீப் சிங் (68 ரன்கள்):
பஞ்சாப் கிங்ஸின் நட்சத்திர பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்ஸ்மேன்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார். அப்போட்டியில் இவர் வெறும் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்து 68 ரன்களை வாரி வழங்கினார்.
சாகிப் உசேன்(62) & பிரபுல் ஹிங்கே(60):
ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சாகிப் உசேன் தனது அறிமுக சீசனிலேயே பஞ்சாப் பேட்ஸ்மேன்களிடம் 62 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதேபோல் சிஎஸ்கே-க்கு எதிரான போட்டியில் பிரபுல் ஹிங்கே 60 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
மார்கோ யான்சன் (61):
கடந்த 6-ம் தேதி நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மார்கோ யான்சன் 61 ரன்கள் கொடுத்தார். இப்போட்டியில் பஞ்சாப் தொடர்ச்சியான 3-வது தோல்வியை சந்தித்தது. பந்துவீச்சாளர்களின் இந்தத் திணறல் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவுக்குச் சவாலாக மாறியுள்ளது.