ஐபிஎல் - ’3 போட்டி… 0 விக்கெட்’... இன்னும் விக்கெட் கணக்கைத் தொடங்காத டாப் பந்துவீச்சாளர்கள்

ஐபிஎல் 2026 தொடரில் இதுவரை ஒரு விக்கெட்டும் எடுக்காதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் - ’3 போட்டி… 0 விக்கெட்’... இன்னும் விக்கெட் கணக்கைத் தொடங்காத டாப் பந்துவீச்சாளர்கள்
Published on

மும்பை,

உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ரா, ஐபிஎல் 2026 தொடரில் இதுவரை ஒரு விக்கெட்டும் எடுக்காதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அணிக்காக விளையாடும் பும்ரா, இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் கிடைக்கவில்லை.

Also Read
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவீர்களா ? ரஷித் கான் பதில்
ஐபிஎல் - ’3 போட்டி… 0 விக்கெட்’... இன்னும் விக்கெட் கணக்கைத் தொடங்காத டாப் பந்துவீச்சாளர்கள்

அடுத்து டெல்லி அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தும் விக்கெட் பெற முடியவில்லை. தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து விக்கெட் எடுக்கவில்லை.

பும்ரா மட்டுமல்லாமல், மேலும் பல முன்னணி பந்துவீச்சாளர்களும் இந்த சீசனில் விக்கெட் இல்லாமல் திணறி வருகின்றனர். போல்ட் (மும்பை இந்தியன்ஸ்), நூர் அகமது, கலீல் அகமது (சென்னை) ஆகியோரும் இன்னும் விக்கெட் கணக்கைத் தொடங்கவில்லை.

மேலும், ஹர்சல் படேல் (ஐதராபாத்), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்), வருண் சக்கரவர்த்தி (கொல்கத்தா) ஆகியோரும் விக்கெட் எடுக்க போராடி வருகின்றனர். முன்னணி பந்துவீச்சாளர்கள் இவ்வாறு விக்கெட் எடுக்காமல் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com