ஐபிஎல் - மற்றொரு மைல்கல்… புதிய சாதனைக்கு அருகில் விராட் கோலி

கோலி இந்த சீசனில் புதிய வரலாறு படைக்க தயாராக உள்ளார்.
ஐபிஎல் - மற்றொரு மைல்கல்… புதிய சாதனைக்கு அருகில் விராட் கோலி
Published on

சென்னை,

ஐபிஎல் 2026 சீசன் வருகிற 28 முதல் தொடங்க உள்ளது. சாதனைகளின் திருவிழாவாக விளங்கும் இந்த தொடரில், ரசிகர்களின் முக்கிய கவனம் மீண்டும் விராட் கோலி மீது திரும்பியுள்ளது. 2008 முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கோலி, இந்த சீசனில் புதிய வரலாறு படைக்க தயாராக உள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் 8,000 ரன்களை கடந்த ஒரே பேட்ஸ்மேனான கோலி, இதுவரை 267 போட்டிகளில் 8,661 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 339 ரன்கள் எடுத்தால், ஐபிஎல் வரலாற்றில் 9,000 ரன்களை எட்டும் முதல் வீரராக மாறுவார். கடந்த 3 சீசன்களாக அவர் தொடர்ந்து சிறந்த பார்மில் இருந்து வருகிறார்.

Also Read
ஜூனியர் ஒருநாள் கிரிக்கெட்: குறுக்கிட்ட மழை... அரைஇறுதியில் நொறுங்கிய தமிழக அணியின் கனவு
ஐபிஎல் - மற்றொரு மைல்கல்… புதிய சாதனைக்கு அருகில் விராட் கோலி

2023ல் 639 ரன்கள் (சராசரி 53.25), 2024ல் 741 ரன்கள் (சராசரி 61.75), 2025ல் 657 ரன்கள் (சராசரி 54.75) என கோலி அசத்தி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் (8) அடித்த வீரராகவும், 63 அரைசதங்கள் பதிவு செய்தவராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். ரன்கள் குவிப்பில் அவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

வருகிற 28-ம் தேதி பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதும் தொடக்கப் போட்டியில், கோலி தனது புதிய சாதனை வேட்டையை தொடங்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com