

கொல்கத்தா,
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளநிலையில், 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும். இதுவரை 3 அணிகள்(பெங்களூரு, குஜராத் மற்றும் ஐதராபாத்) பிளே ஆப்புக்குள் சென்றிருக்கின்றன.
எஞ்சிய ஒரு இடத்தை பிடிக்க 5 அணிகள் போட்டியில் உள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் 65வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளநிலையில், அப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் மும்பை பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெற்றால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் வாய்ப்பு சற்று அதிகரிக்கும். அதேவேளை, ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்பு சரிந்து பிற அணிகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.