தொடர் தோல்விகளால் துவண்டு போன மும்பை... கேப்டன் ஹர்திக் பாண்டியா வேதனை

மும்பை அணி, தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் தோல்விகளால் துவண்டு போன மும்பை... கேப்டன் ஹர்திக் பாண்டியா வேதனை
Published on

மும்பை,

வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 24-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த சீசனில் மும்பை அணி சந்திக்கும் தொடர்ச்சியான 4-வது தோல்வி இதுவாகும்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 12 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் (60 பந்துகளில் 112* ரன்கள்) மற்றும் நமன் தீர் (31 பந்துகளில் 50 ரன்கள்) 3-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர். இருப்பினும், மற்ற வீரர்கள் சொதப்பியதால் மும்பை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Also Read
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து - ரியல் மாட்ரிட்டை வெளியேற்றிய பேயர்ன் முனிச்... அரைஇறுதிக்கு முன்னேறி அசத்தல்
தொடர் தோல்விகளால் துவண்டு போன மும்பை... கேப்டன் ஹர்திக் பாண்டியா வேதனை

196 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணி, பிரப்சிம்ரன் சிங் (39 பந்துகளில் 80* ரன்கள்) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (35 பந்துகளில் 66 ரன்கள்) ஆகியோரின் அதிரடி அரைசதங்களால் 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. 21 பந்துகள் மீதமிருக்கையிலேயே 198/3 ரன்கள் எடுத்து பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இத்தோல்விக்கு பின் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது அதிருப்தியைத் தெரிவித்தார். அவர் பேசுகையில், "உண்மையைச் சொல்லப்போனால், சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் பஞ்சாப் அணி எங்களை விட சிறப்பாகச் செயல்பட்டது. நாங்கள் எங்கே தவறு செய்கிறோம் என்பதை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும். அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது இருக்கும் வீரர்களைக் கொண்டே தொடர வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும். இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்" என்றார்.

ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது அந்த அணியின் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com