

முனிச்:
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான புகழ்பெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற பரபரப்பான காலிறுதிச் சுற்றின் 2-வது ஆட்டத்தில், பேயர்ன் முனிச் (ஜெர்மனி) மற்றும் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணிகள் மோதின.
ஆட்டத்தின் பெரும்பகுதி நேரம் ரியல் மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று வலுவாக இருந்தது. தோல்வியின் விளிம்பில் இருந்த பேயர்ன் முனிச் அணிக்கு கடைசி இரண்டு நிமிடங்கள் ஜாக் பாட்டாக அமைந்தது. ஆட்டத்தின் இறுதி நேரத்தில் லூயிஸ் டயாஸ் மற்றும் மைக்கேல் ஒலிஸ் ஆகியோர் மின்னல் வேகத்தில் கோல் அடித்து அணியை 4-3 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தனர்.
முதல் சுற்று ஆட்டத்தில் பேயர்ன் முனிச் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டாம் சுற்றில் பேயர்ன் முனிச் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இரு சுற்று ஆட்டங்களின் முடிவில் 6-4 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வெளியேற்றி, பேயர்ன் முனிச் அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
அரைஇறுதியில் பேயர்ன் முனிச் அணி - பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி வருகிற 29, 30-ந் தேதி நடக்கிறது.