ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றம்... டேவிட் பெயின் ’அவுட்’... கோட்சே ’இன்’

இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றம்... டேவிட் பெயின் ’அவுட்’... கோட்சே ’இன்’
Published on

ஐதராபாத்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணி, காயம் காரணமாக விலகிய டேவிட் பெய்ன்-க்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்சேவை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த சீசனில் ஐதராபாத் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடிய டேவிட் பெயின், 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ஆனால், கணுக்கால் காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகினார்.

முன்னதாக குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடிய கோட்சே, ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரின் வருகை ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read
’சஹால் இல்லை... விராட்போல ஒருவர்தான் வேண்டும்’ - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷெபாலி
ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றம்... டேவிட் பெயின் ’அவுட்’... கோட்சே ’இன்’

இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. தொடர் வெற்றிகளைத் தக்கவைக்க சென்னை அணியும், சொந்த மண்ணில் ஆதிக்கத்தைச் செலுத்த ஐதராபாத் அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com