’சஹால் இல்லை... விராட்போல ஒருவர்தான் வேண்டும்’ - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷெபாலி

தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விராட் கோலியை ஷெபாலி உதாரணமாக கூறினார்.
’சஹால் இல்லை... விராட்போல ஒருவர்தான் வேண்டும்’ - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷெபாலி
Published on

சென்னை,

யுஸ்வேந்திர சஹால் மற்றும் விளையாட்டுத் தொகுப்பாளர் ஷெபாலி பக்கா ஆகியோருக்கு இடையே காதல் இருப்பதாக பரவி வரும் வதந்திகளுக்கு, ஷெபாலி பக்கா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஷெபாலி பக்கா, "உண்மையைச் சொல்லப்போனால், இதுபோன்ற காதல் வதந்திகளைக் கேட்டு நான் சோர்வடைந்துவிட்டேன். இரண்டு பேர் டின்னருக்கு போனாலே அது டேட்டிங் என்று சொல்லுவது, மக்களின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது.

இனிமேல் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. இதற்காக மன அழுத்தம் (Stress) கொள்வதை நான் நிறுத்திவிட்டேன். மக்கள் எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். உண்மை என்ன என்பது எனக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும் நன்றாகத் தெரியும்," என்று அவர் கூறினார்.

Also Read
’கடினமாக உழைத்தால்’... அர்ஷ்தீப்பின் ரகசியத்தை உடைத்த ரிக்கி பாண்டிங்
’சஹால் இல்லை... விராட்போல ஒருவர்தான் வேண்டும்’ - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷெபாலி

எதிர்காலத்தில் ஒரு கிரிக்கெட் வீரரைத் திருமணம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு அவர் மிகத்தெளிவாக "இல்லை" என்று பதிலளித்தார். கிரிக்கெட் என்பது தனது தொழில் என்றும், தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தொழிலோடு கலக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

தனக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விராட் கோலியை அவர் உதாரணமாகக் கூறினார். உலகில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிதான் மிகவும் 'பெர்பெக்ட்' ஆன ஜோடி என்று புகழ்ந்தார். விராட் கோலியைப்போல ஆளுமை (Personality) மற்றும் அர்ப்பணிப்பு (Commitment) கொண்ட ஒரு நபரையே தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

விளையாட்டுத் துறையில் ஒரு சிறந்த தொகுப்பாளராக இருக்கும் ஷெபாலி பக்கா, 'பிக் பாஸ் 13' (Bigg Boss 13) நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நாடு முழுவதும் பெரும் புகழ்பெற்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com