

புதுடெல்லி,
ரூ.4 கோடிக்கு டிரெட் முறையில் ஹர்ஷல் படேல் குஜராத் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக ஏற்கெனவே பல முக்கிய வீரர்கள் அணிமாறியுள்ளனர். ரிஷப் பண்ட் லக்னோ அணியில் இருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும், டி.நடராஜன் டெல்லி அணியில் இருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் மாறியுள்ளனர்.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்ட்யா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். அவருக்குப் பதிலாக பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், ஹர்ஷல் படேலை வாங்குவதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், அவரை விடுவிப்பதற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ஹர்ஷல் படேலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.8 கோடிக்கு வாங்கியது. தற்போது அவரை ரூ.4 கோடி குஜராத் அணி டிரேட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்ஷல் படேல் கடந்த 2012-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
2021-ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக 32 விக்கெட்டுகளையும், 2024-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஊதா நிறத் தொப்பியை வென்றார். இதன் மூலம் இரண்டு முறை அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்த டிரேடு உறுதியானால், ஐபிஎல் வரலாற்றில் ஹர்ஷல் படேல் விளையாடும் 5-வது அணியாக குஜராத் டைட்டன்ஸ் அமையும்.