ஐபிஎல் வீரர்கள் ஏலம் எப்போது? வெளியான பரபரப்பு தகவல்

ஐபிஎல் ஏலம் கோவாவில் நடைபெற உள்ளது.
 ஐபிஎல் வீரர்கள் ஏலம் எப்போது? வெளியான பரபரப்பு தகவல்
Published on: 

மும்பை,

2027ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. ஆண்டு தோறும் நடைபெற்று வரும் இந்த டி20 கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான தொடராகும்.

இதனிடையே, 20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதேவேளை, 20வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கோவாவில் நடைபெற உள்ளது. ஆனால், ஏலம் எப்போது நடைபெறும் என்ற தேதியை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஐபிஎல் ஏலம்

இந்நிலையில், 20வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் கோவா நட்சத்திர ஓட்டலில் டிசம்பர் 16ம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com