சவுதி அரேபியாவில் இன்று தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் இன்று தொடங்குகிறது.
Image Courtesy ; IPL
Image Courtesy ; IPL
Published on

துபாய்,

10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஏலம் நடைபெறுகிறது. 1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் இறுதியாக ஏலத்தில் இடம்பெற உள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது. ஜியோ சினிமா செயலியிலும் ஏல நிகழ்ச்சியை காணலாம்.

ஐ.பி.எல். ஏலத்தில் வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகள் கையிருப்பு வைத்துள்ள தொகை விவரம்:

சென்னை - ரூ. 55 கோடி

டெல்லி - ரூ. 73 கோடி

குஜராத் - ரூ. 69 கோடி

கொல்கத்தா - ரூ 51 கோடி

லக்னோ - ரூ. 69 கோடி

மும்பை - ரூ. 45 கோடி

பஞ்சாப் - ரூ. 110.5 கோடி

ராஜஸ்தான் - ரூ. 41 கோடி

பெங்களூரு - ரூ. 83 கோடி

ஐதராபாத் - ரூ. 45 கோடி

X

Daily Thanthi
www.dailythanthi.com