ஐபிஎல் - பிரேவிஸ் அதிரடி... ஐதராபாத்துக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை

ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஐபிஎல் - பிரேவிஸ் அதிரடி... ஐதராபாத்துக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை
Published on

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (திங்கட்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 63-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான சன்ரைசர் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் களம் இறங்கிய சென்னை அணிக்கு சாம்சன் அதிரடி துவக்கம் கொடுத்தார்.

இதன் மூலம் 2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 30 வந்தது. அப்போது கம்மின்ஸ் வீசிய 3-வது ஓவரில் அதிரடியாக ஆடிய சாம்சன் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய உர்வில் படேல் அந்த ஓவரில் 2 சிக்சர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டார். தொடர்ந்து ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், 5-வது ஓவரில் உர்வில் தனது விக்கெட்டை இழந்தார். பவர்பிளே முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டை இழந்து 57 ரன்கள் எடுத்தது.

Also Read
ஐபிஎல் - ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு
ஐபிஎல் - பிரேவிஸ் அதிரடி... ஐதராபாத்துக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை

இதன் பின் ஜோடி சேர்ந்த ருதுராஜ் மற்றும் கார்த்திக் சர்மா ஜோடி அணியை மீட்டெடுத்தது. இதில் அதிரடியாக ஆடிய கார்த்திக் சர்மா 32 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் பிரேவிஸ் களமிறங்கிங்கினார். அப்போது மறுபுறம் நிதானமாக ஆடி வந்த கேப்டன் ருதுராஜ் 15 ரன்கள் எடுத்திருந்தநிலையில், கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

பின்னர் பிரேவிஸ்-சிவம் துபே ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆட அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்தது. அப்போது பிரேவிஸ் 44 ரன்கள் அடித்திருந்தநிலையில், மலிங்கா பந்துவீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து துபே 26 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடியில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரேவிஸ் 44(27) ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் ஆட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com