ஐ.பி.எல்.: சாதனை பட்டியலில் விராட் கோலி, ஸ்டோக்சை முந்தி முதலிடம் பிடித்த பட்லர்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பட்லர் 109 ரன்கள் குவித்தார்.
ஐ.பி.எல்.: சாதனை பட்டியலில் விராட் கோலி, ஸ்டோக்சை முந்தி முதலிடம் பிடித்த பட்லர்
Published on

கொல்கத்தா,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் 17-வது ஐ.பி.எல். சீசனில் நேற்று நடைபெற்ற அனல் பறந்த ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சுனில் நரைனின் அபார சதத்தின் மூலம் 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி பட்லரின் சதத்தின் உதவியுடன் கடைசி ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பட்லர் அடித்த சதம் சேசிங்கின்போது அவர் அடித்த 3-வது சதமாக பதிவானது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் சேசிங்கின்போது அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி மற்றும் ஸ்டோக்சை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. பட்லர் - 3 சதங்கள்

2. விராட் கோலி/ பென் ஸ்டோக்ஸ் - 2 சதங்கள்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com