ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு- குஜராத் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் -குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு- குஜராத் இன்று மோதல்
Published on

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கி ழமை) நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை சந்திக்கிறது.

பெங்களூரு அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், சென்னையை போட்டுத் தாக்கியது. 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. அதன் பிறகு மும்பை, லக்னோவை பதம் பார்த்தது. முந்தைய ஆட்டத்தில் டெல்லியிடம் பணிந்தது. அந்த அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (247 ரன்), கேப்டன் ரஜத் படிதார் (230), பில் சால்ட் (202), டிம் டேவிட் தேவ்தத் படிக்கல் சிறப்பாக செயல்பட்டு வருகி றார்கள். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் (10 விக்கெட்), குருணல் பாண்ட்யா, ஜேக்கப் டப்பி, ஹேசில்வுட் மிரட்டக்கூடியவர்கள்.

குஜராத் அணி முதல் இரு ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தானிடம் தோற்றது. அடுத்து டெல்லி, லக்னோ, கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது. கடந்த ஆட்டத்தில் 99 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் மோசமான தோல்வியை தழுவியது.முந்தைய ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 200 ரன் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 100 ரன்னில் அடங்கியது. இந்த சீசனில் ஒரு அணியின் மோசமான ஸ்கோராக இது பதிவானது. ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் (26 ரன்) தவிர யாரும் 20 ரன்னை கூட எட்டவில்லை.

பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் (265 ரன்), ஜோஸ் பட்லர் (206) நல்ல நிலையில் உள்ளனர். ராகுல் திவேதியா, கிளென் பிலிப்ஸ் கைகொடுக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (12 விக்கெட்), கசிசோ ரபடா (10), முகமது சிராஜ், ரஷித் கான், அசோக் ஷர்மா அவ்வப்போது கலக்குகிறார்கள்.

கடந்த தோல்வியை மறந்து இரு அணிகளும் வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக வரிந்துகட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 3-ல் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குரு ணல் பாண்ட்யா, ராசிக் சலாம், புவனேஷ்வர் குமார், சுயாஷ் ஷர்மா, ஹேசில்வுட்.

குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங் டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், ராகுல் திவேதியா, ஷாருக்கான், ரஷித் கான், கசிசோ ரபடா, அசோக் ஷர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com